Home About the eclipse Live webcast Language selection > EnglishSinhaleseTamil
2010 ஆம் ஆண்டின் பாரிய சூரிய கிரகண நிகழ்வொன்று எதிர்வரும் 15ஆம் திகதி இடம்பெறுகின்றது. இந்நிகழ்வு ஆபிரிக்க நாடுகளில், குறிப்பாக மத்திய ஆபிரிக்காவின் சாட், கொங்கோ, உகண்டா, கென்யா, சோமாலியா மற்றும் ஆசிய நாடுகளான மாலைதீவு, இலங்கை, தென்னிந்தியா, பங்களாதேஷ், பர்மா, சீனா ஆகிய நாடுகளில் தென்படும்.

இலங்கையைப் பொறுத்த வரை வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் இந்நிகழ்வினைத் தெளிவாகக் காண முடியும். சூரிய கிரகணம் 10 நிமிடம் 18 வினாடிகளுக்கு தெரியும்.

யாழ்ப்பாணத்தில் தென்படும் கிரகணத்தை, எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ (வீரகேசரி), இலங்கை வானவியல் அமைப்பு, ரோயல் கல்லூரியின் வானவியல் அமைப்பு மற்றும் பல வானவியல் நிலையங்களுடன் இணைந்து virakesari.lk மற்றும் skylk.com இணையத் தளத்தில் நேரடியாகக் காட்சி படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது .

ஜனவரி 15 ஆம் திகதி நீங்களும் ஒரு காட்சியாளராக virakesari.lk மற்றும் eclipse.skylk.com. உடன் இணைந்து கொள்ளுங்கள். மேலதிக தொடர்புகளுக்கு +94-11-5322777 / webmaster@virakesari.lk


Some rights reserved | www.skylk.com